எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி..!! வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீது குவியும் புகார்கள்..!!

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீது 8 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் வசூல் தொடர்பாக இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் மோசமான அணுகுமுறைகள் குறித்த புகார்கள் அதிகம் என கூறப்படுகிறது.

இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக  ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கடனைத் திரும்பப் பெறுவதற்கு ஏஜென்ட்களை கடனை வசூலிக்க வாடிக்கையாளர்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து செயலிகள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராயவும், இதை முறைப்படுத்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

RBI Vs Government: RBI Looked Other Way, Says Arun Jaitley On Loan  Excesses: 10 Points

இவை பெரும்பாலும் பதிவு பெறாத மற்றும் தனி நபர்களால் செயல்படுத்தும் நிறுவனமாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் மிக அதிகபட்ச வட்டி வசூலித்ததாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் மிக அதிக அளவில் புகார்கள் வந்துள்ளது என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து கர்நாடகா,டெல்லி, ஹரியானா, தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக புகார்கள் வந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.