ஏற்றுமதி வரி ரத்து..!! லாபம் பார்க்கும் பெரிய நிறுவனங்கள்..!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை  ரத்து செய்துள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது. இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

குறிப்பாக தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் கூடுதல் லாபம் ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாக ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு வரி விதித்துள்ளது. ஏற்றுமதியாகும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 வரியும் டீசல் லிட்டருக்கு ரூ.13 வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.