நாளை முதல் ஜிஎஸ்டி..!! எந்தெந்த பொருட்கள் விலை உயரும் என மக்கள் தவிர்ப்பு..!!

நாளை முதல் ஜிஎஸ்டி அதிகரிப்பு அமலுக்கு வரும் நிலையில் எந்தெந்த பொருட்கள் விலை உயரும் என பார்க்கலாம். கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. 5சதவிகித வரி விதிப்பால், பிராண்ட் அல்லாத அரிசி, கோதுமை மாவு, தயிர், பன்னீர் ஆகியவற்றின் விலை உயரும்.

ஓட்டல் அறையில் தினசரி வாடகை 1,000 ரூபாய்க்கு இருந்தால் 12 சதவிகித வரி விதிப்பால், வாடகை அதிகரிக்கும். வங்கிகள் காசோலை புத்தகம் வழங்க 18 சதவிகித வரிப் பிடித்தம் செய்யப்படும். அச்சு, எழுது மை, மார்க்கர், கத்தி, பிளேடு, பென்சில் எல்இடி விளக்கு ஆகியவற்றின் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வதால் அவற்றின் விலை அதிகரிக்கும். சூரிய சக்தி ஹீட்டர் மீதான வரி 5இல் இருந்து 12 சதவிகிதமாவதால் அதன் விலை உயரும்.

CAIT to organise nationwide agitation for simplification of GST laws

சாலை, பாலம், ரயில்வே, மெட்ரோ,மயானங்களில் பணி ஒப்பந்தங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வால், அவற்றின் சேவைக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. லாரி மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வாடகை மீதான ஜிஎஸ்டி 18 சதவிகித்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைப்பால், அவற்றின் வாடகை குறைய வாய்ப்புள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.