இந்தியாவில் தனிநபர் வருமானம் உயர வேண்டும் – தர்மன் சண்முகரத்தினம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சேவையை பாராட்டும் வகையில் அவர் பெயரில் நினைவு சொற்பொழிவுக்கு, மத்திய நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்தது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி, ஜி.எஸ்.டி., முதல் விண்வெளி மற்றும் அணுசக்தி துறை தொடங்கி இன்றைய இந்தியா அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை தயாரித்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் பேசியபோது தனிநபர் வருமானத்தை கணிசமாக உயர்த்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்றார்.

India's unfulfilled potential largest in world: Singapore Deputy PM |  Business Standard News

இதனால் அரசாங்கத்தின் பங்கு மறுசீரமைப்பின் மூலம் தனித்துவமான சாதனைகளை உருவாக்க முடியும். சீர்திருத்தங்கள், மற்றும் தொழிலாளர் சட்டங்களை எளிதாக்குதல் மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையை விரிவுபடுத்தினால் இந்தியா இந்த வளர்ச்சி விகிதத்தை அடைய முடியும் என்றார்.

மேலும் இந்தியா தனிநபர் வருமானத்தை உயர்த்த, உற்பத்தியை அதிகரித்து  வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மூலம்  அடுத்த  25 ஆண்டுகளில் 8 முதல் 10 சதவீத வளர்ச்சி அடைய முடியும் என்றார். 

Leave a Reply

Your email address will not be published.