இங்கிலாந்து மக்களுக்கு நற்செய்தி..!! விரைவில் வரப்போகும்  பிரம்மாண்டமான சார்ஜிங் ஸ்டேஷன்..!!

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் உற்பத்தியும், பயன்பாடும் அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி குறைவாகவே  உள்ளது

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் ஏராளமானோர் மின்சார வாகனங்கள் பண்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக ஆக்ஸ்போர்டு நகரில் பிரம்மாண்டமான சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது.

UK opens first fully electric vehicle service station, powered by solar,  today - Electrek

இங்கு ஒரே நேரத்தில் 42 கார்களை சார்ஜ் செய்யலாம். இந்த சார்ஜிங் ஸ்டேஷன் 395 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இது மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இங்கு 50 மெகாவாட் ஹைபிரிட் பேட்டரியும் நிறுவப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன்  இங்கிலாந்து அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன் மூலம் முழுவதும் மின்சார‌ வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் மின்சார வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.