பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம்..!! சாமானிய மக்களுக்கு நன்மை தருமா..!!

நரேந்திர மோடி தலைமையிலான அரசு 15 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும், 20 சதவீதம் எத்தனால் கலந்த டீசலுக்கும் உரிய சதவீதத்தில் கலால் வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. 

நரேந்திர மோடி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கச்சா எண்ணெய், மற்றும் சில நிறுவனங்களை தாண்டி சாமானிய மக்களுக்கு அதிகப்படியான நன்மை கிடைக்க உள்ளது.இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தியாவில் நீண்ட காலமாக எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், மத்திய அரசின் கூடுதல் கலால் வரிச் சலுகை பெரிய அளவில் நன்மை அளிக்க உள்ளது.

Narendra Modi: மோடி ஆட்சியில் நாட்டை விட்டு ஓடும் தொழிலதிபர்கள்! - over  35000 high networth individuals left india in modi regime says west bengal  fm amit mitra | Samayam Tamil

அதேபோல் அக்டோபர் 1ஆம் தேதி முதல் எத்தனால் கலப்படம் செய்யப்படாத பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டதால் அதற்கு மத்திய அரசு கூடுதலாக 2 ரூபாய் கலால் வரியை ஒரு லிட்டருக்கு வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த வரி சலுகையால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவு செய்யும் தொகையை குறைத்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என தகவல் வெளிவந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.