வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவதில் தளர்வு அறிவித்த ஒன்றிய அரசு..!!

வெளிநாட்டில் தங்கியிருக்கும் உறவினர்களிடம் இருந்து அதிகாரிகளுக்கு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வரையில் பெற்றுக்கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தில் தற்போது புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.  இந்த தொகையை விட அதிகமாக இருந்தால் தனிநபர்கள் அரசாங்கத்திற்கு ஒரு மாதத்தில் இருந்து  மூன்று மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு 1% வட்டிக்கு கடன் தரும் வங்கி! கந்து வட்டிக்காரர்களை  விரட்டியடித்த Dullopur கிராமம்! | Dullopur People Bank giving farm loan for  1 percent to protect villagers ...

அதன்படி வெளிநாட்டு பங்களிப்பு திருத்த விதிகளை கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டு பங்களிப்பு விதிகள் 2011 விதி 6 இல் ஒரு லட்சம் ரூபாய் என்பதற்கு பதிலாக 10 லட்சம் ரூபாய் எனவும் மாற்றப்பட்டுள்ளது. 

எனவே ஆண்டுதோறும் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களிடம் ரூ.10 லட்சம் வரையில் பெறலாம். இந்த புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முந்தைய வரம்பு ரூ.1 லட்சமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது  

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…