இந்தியாவில் தொடர்ந்து உயரும் அரிசி விலை..!! பின்னணி என்ன..?

வங்கதேச அரசாங்கம் பாசுமதி வகை இல்லாத அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய உள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதத்தில் தான் வங்கதேசத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படும்.

ஆனால், மழை வெள்ளம் காரணமாக உள்நாட்டு உற்பத்தி அங்கு குறைந்துவிட்ட நிலையில்  அதற்கு முன்பே அரிசி இறக்குமதி செய்ய வங்கதேச அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது  வங்கதேச அரசாங்கம் பாசுமதி வகை இல்லாத அரிசியை கடந்த 22ம் தேதியில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளுமாறு அனுமதி வழங்கியுள்ளது. 

இலங்கை: ஆசிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய முடிவு - BBC News தமிழ்

இதனால் இந்தியாவில் அரிசி விலை 10% உயர்ந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதேபோல் வங்கதேசத்திற்கு அருகில் இருக்கும் மேற்குவங்கத்தில் அரிசி விலை 20 சதவீதமும், மற்ற இடங்களில் 10 சதவீதமும் உயர்ந்திருப்பதாக  கூறப்படுகிறது.  இந்த நிலை நீடித்தால் அடுத்து வரும் மாதங்களில் அரிசியின் விலை மேலும் உயரும் என கூறப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், உலகளாவிய பணவீக்கம் போன்ற காரணத்தால் இந்திய பங்குகள்  ஏற்கனவே  கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற விலைவாசி உயர்வு மக்களை அதிகளவு மக்களை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *