மளிகை பொருட்கள் டெலிவரி செய்ய சொமேட்டோ நிறுவனம் திட்டம்..!!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் சொமேட்டோ நிறுவனம் உணவு டெலிவரியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ மளிகை டெலிவரியில் ஈடுபட்டு வந்த  பிளிங்கிட் நிறுவனத்தை ரூ.4,440 கோடிக்கு வாங்க முன்வந்துள்ளது.  

கடந்த 2 ஆண்டுகளாக உணவு டெலிவரியில் ஏற்பட்ட சரிவின் காரணமாக தற்போது  மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் தொழிலில் இறங்க உள்ளது. சொமேட்டோ பங்குகளுக்கு ஏற்பட்ட சரிவினால் தற்போது ரூ.4,447 கோடிக்கு ஒப்பந்தம் போட உள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் தான் பிளிங்கிட் நிறுவனம் சொமேட்டோ விடம் ரூ.750 கோடி நிதி திரட்டியது குறிப்பித்தக்கது.   

I Installed Swiggy, did not Order Food, Instead...

சொமேட்டோவிடம் இருந்து பெறும்.வாடிக்கையாளர்கள் ஆர்வம் இந்த கையகப்படுத்தும் திட்டம் குறித்து சொமேட்டோவின் தீபிந்தர் கோயல் கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக விரைவு டெலிவரி என்ற உத்திக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளோம். மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை விரைவாக பெறுவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தத் தொழில் இந்தியா மற்றும் உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடைவதை கண்டோம்.தற்போது இதனை எங்கள் முக்கிய உணவு டெலிவரியுடன் ஒருங்கிணைத்து செய்ய உள்ளோம். அது சொமேட்டோவுக்கு நீண்ட கால வெற்றிக்கான உரிமையை வழங்கும். தற்போதைய உணவு டெலிவரி தொழில் சீராக லாபத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த சரியான சமயத்தில் அடுத்த முயற்சியில் உள்ளோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *