நைக் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!! அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட அதிர்வு..!!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இருந்து மெக்டொனால்டு, ஸ்டார்பக்ஸ், இந்தியாவை சேர்ந்த டாடா ஸ்டீல், இன்போசிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தொடர்ந்து வெளியேறுவதாக அறிவித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபலமான காலணி நிறுவனமான நைக் ரஷ்யாவில் இருந்து நிரந்தரமாக வெளியேற போவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் ரஷ்யாவில் உள்ள கடைகளை நைக் நிறுவனம் தற்காலிகமாக மூடியது. ஆனால் பிரச்சனை தற்போது மிக தீவிரமாக சென்று கொண்டுள்ள நிலையில், அந்த கடைகளை மீண்டும் திறக்க போவதில்லை என அறிவித்துள்ளது. 

Nike: Brand Damage Risk (NYSE:NKE) | Seeking Alpha

அதேபோல் ஆன்லைனில் நைக் சேவையினை இனி ரஷ்யாவில் பெற முடியாது என அறிவித்துள்ளது. இது நைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே சமீபத்தில் ரஷ்யாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க போவதில்லை என்று  நைக் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

உக்ரைன் ரஷ்யாவில் இருந்து மொத்தம் அதன் வருவாயில் 1% மட்டும் பெறுவதாக நைக் தெரிவித்துள்ளது. நைக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையினால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் நைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The Rise of Nike: The Psychology Behind Its Success | by Jennifer Clinehens  | Choice Hacking | Medium

இந்த நிலையில் நைக் நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. நைக்கின் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, அமெரிக்க பங்கு சந்தையில் நைக்கின் பங்கு விலையானது கிட்டத்தட்ட 1% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *