சின்ன பிசினஸ் எல்லாம் நமக்கு செட் ஆகாது..!!! ஹலோ ஆபிஸர் ஹெலிகாப்டர் வாங்க கடன் வேணும்..!!
மகாராஷ்டிரா மாநிலம் தக்டோடா கிராமத்தை சேர்ந்த கைலாஷ் என்பவர் விவசாய செய்ய முடியாத காரணத்தால் ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்துள்ளார். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
கடந்த சில மாதமாக சரியான மழை இல்லாத காரணத்தினால் இவரால் சரியாக விவசாயம் செய்ய முடியவில்லை. வரட்சியின் காரணத்தினாலும் சில ஆண்டுகளாக விவசாயம் என்பது கடினமாகி விட்டது.
மேலும் பயிர் காப்பீட்டில் கிடைக்கும் பணமும் போதவில்லை என்ற நிலையில் புதிய தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளார். என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தவர் யாரும் செய்யாத தொழிலை தேர்ந்தெடுத்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அது தான் ஹெலிகாப்டர் தொழில். ஹெலிகாப்டர் வாங்குவதற்கு அவர் 6.5 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். மற்ற தொழில்களில் போட்டி அதிகம் என்பதால் இந்த தொழிலை தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் பணக்காரர்கள் மட்டும் தான் பெரிதாக கனவு காண வேண்டும் என சட்டம் இல்லை, விவசாயிகளுக்கு பெரிதாக கனவு காண வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.