அமெரிக்காவின் வர்த்தக போரால் சிக்கி தவிக்கும் முன்னணி நிறுவனம்..!! 

ஐபோன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இருப்பினும் அந்த நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் சீனாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் தயாரிப்பு நிறுவனம் தற்போது சீனாவில் இருந்து வெளியேறி வியட்நாமுக்கு மாறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல வருடமாக ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து தான்  ஐபோன் தேவைகளை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. இதனால் சீனாவில் இயங்கி வரும் அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இது தவிர சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் காரணத்தால் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு வாய்ப்பு உள்ளது.   

It's Official: Apple Is Now a Silicon Company | WIRED

இதனை கருத்தில் கொண்டு சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்த ஆப்பிள் நிறுவனம் இந்தியா, வியட்நாம் உள்பட ஒரு சில நாடுகளில் தங்கள் தொழிற்சாலை மாற்ற திட்டமிட்டு வந்தது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் சீனாவில் உள்ள  நிறுவனத்தை வியட்நாமுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதனால் சின்ன நாடான வியட்நாமில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான வளங்கள் வியட்நாமில் பெறுவது எளிது என்று தான் ஆப்பிள் நிறுவனம் கருதியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *