தொடர்ந்து சரிந்து வரும் எல்ஐசியின் பங்கு விலை..!! குழப்பத்தில் ஒன்றிய அரசு..!!  

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் நடத்து வேற ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. ஆனால் தொடர்ந்து சரிந்து வந்த எல்ஐசி பங்கின் விலை தற்போது 708 ரூபாய் என்ற அளவில் குறைந்தது உள்ளது.

இதனால் எல்ஐசி பங்குகளை ஆர்வத்துடன் வாங்கிய முதலீட்டாளர்கள் தற்போது கவலையில் உள்ளனர்.இந்த நிலையில் எல் ஐ சி நிறுவன பங்குகள் விலை தொடர்ந்து சரிவு போக்கில் இருப்பது கவலை தருவதாக  ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Govt 'concerned' about dip in LIC share price; calls it temporary blip |  Business Standard News

இது தற்காலிகமான சரிவாக இருந்தாலும் பங்கு முதலீட்டாளர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கு விலக்கல் துறை செயலாளர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.

எல்.ஐ.சி பொது பங்கு வெளியீடு உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக பங்குச் சந்தைகள் கடுமையாக சரிவு ஏற்பட்டதால் எல்.ஐ.சி பங்கு வெளியீடு தள்ளிப்போனது.

அதன் பின் மே 4ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடக்கத்தில் ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. அதன்பின் எல் ஐ சி பங்குகள் மே 12ம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.

When is the LIC IPO? What is the share price ..? Do you know how much money

முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில்  இந்த விலையை காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் வெளியானது. 

இருப்பினும் தொடர்ந்து சரிந்து வந்த எல்ஐசி பங்கின் விலை தற்போது 708 ரூபாய் உள்ளது ஒன்றிய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *