கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு..!! இந்தியாவில் பணவீக்கம் ஏற்படும் அபாயம்..!!!

ரஷ்யா – உக்ரைன்  போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்படுமோ என பல நாடுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. இதன் விளைவாக தங்கம், கச்சா எண்ணெய் போன்ற பொருட்களின் விலையும்  கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவில் கடந்த சில மாதமாக அதிகமான விலையேற்றம் காரணமாக  பணவீக்கம் அதிகரித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும்  தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது தவிர ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக வர்த்தக தடை செய்துள்ள காரணத்தால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த பண வீக்க பிரச்சனையை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தது. அதேபோல் பேங்க் ஆப் இந்தியாவும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

இருந்தும் உலகம் முழுவதும் பணவீக்க விகிதமானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. அதுமட்டுமின்றி பல நாடுகள் தங்களின் முதலீடுகளை  டாலர்களில் மாற்றியத்தில் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு மேலும் சரிந்தது.

இந்த நிலையில் இந்தியாவை பொறுத்தவரை இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் 77 ஆக சரிவடைந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பானது 0.48%  சரித்து ரூ. 77.28 ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவைக் கண்ட நிலையில் இந்தியாவின் பணவீக்கம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் அச்சப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *