முன்னணி சிமெண்ட் நிறுவனத்தை கைப்பற்ற அதானி குழுமம் தீவிர முயற்சி..!!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான அதானி குழுமம் உலகின் மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமாக திகழும் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட்  நிறுவனத்தை வாங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் ஏசிசி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்த இரு  நிறுவனங்களையும் அதானி குழுமம் சுமார் 7.5 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதற்காக அதானி குழுமம்  சில நிதிக் குழுக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிதிக்குழுக்கள் அதானி குழுமத்திற்கு 2 பில்லியன் டாலர் வரை நிதியுதவி வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் அதானி குழுமம் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனமாக உருவெடுக்கும் கூடும் என முக்கிய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது  சிமெண்ட் உற்பத்தியில்  சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உருவாகும் என தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்களை வாங்க ஐக்கிய அரபு தலைவர்களுடன் அதானி தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

மேலும்  அதானி குழுமத்திற்கு கடன் உதவி வழங்க பல சர்வதேச வங்கிகளான பார்க்லேஸ், டாய்ச் வங்கிகள் மற்றும்  ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள்  போன்ற இந்திய வங்கிகள் நிதி உதவி தர முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *