இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றுமதி, இறக்குமதிகள்

இந்தியாவின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 25.28% அதிகரித்து 34.5 பில்லியன் டாலராக உள்ளது. பொறியியல் துறைகளில் பயன்படுத்தும் பொருட்கள், பெட்ரோலியம், நகை ஆபரணம் உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறக்குமதி 23.54% அதிகரித்து 51.93 பில்லியன் டாலராக உள்ளது. விளைவாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை 17.42 பில்லியன் டாலராக உள்ளது.

ஏப்ரல் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 46.73% அதிகரித்து 335.58 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் இறக்குமதி நடப்பு நிதி ஆண்டில் 62.65% அதிகரித்து 495.75 பில்லியன் டாலராக உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தங்க ஏற்றுமதி 40.52% குறைந்து 2.4 பில்லியன் டாலராக உள்ளது.அதேபோல கச்சா எண்ணெய் 26.9% அதிகரித்து 11.9 பில்லியன் டாலராக உள்ளது.

எவ்வாறாயினும், மருந்து பொருட்கள் ஏற்றுமதியில்  ஜனவரி மாதம்  1.15 சதவீதம் குறைந்து 2.05 பில்லியன் டாலராக இருந்தது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (fieo) துணைத் தலைவர் காலித் கான் கூறுகையில், தற்போதைய வளர்ச்சி விகிதத்தைப் பார்த்தால், இந்த நிதியாண்டில் இந்தியா 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கைத் தாண்டும். என்று fieo தலைவர் ஏ சக்திவேல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…