எத்தன தடவ விலையை ஏத்துவீங்க …. ரீசார்ஜ் கட்டணங்களை விலையேற்றம் செய்யும் ஏர்டெல்

இந்தியாவில் தற்போது வர்த்தக போட்டியின் காரணமாக அதிக அளவிலான வருமானத்தை இழந்து உள்ள டெலிகாம் நிறுவனங்கள் அடுத்தடுத்து கட்டணத்தை உயர்த்தி வருகிறது.

இதனிடையே நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல் முக்கியமான முடிவு எடுத்துள்ளது. ஜியோவின் தாக்கத்திலிருந்து மீண்டும் தனக்கான வர்த்தகத்தை தொடர்ந்து பெற துவங்கியுள்ள பாரதி ஏர்டெல், டிசம்பர் காலாண்டில் கட்டண உயர்வு, கூகுள் முதலீடு ஆகியவற்றின் மூலம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பிரிபெய்டு திட்டத்திற்கான கட்டண விகிதங்களை மாற்றியது.

இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணங்கள் 3 அல்லது 4மாதங்களுக்குள் உயர்த்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக சொல்ல போனால் இதற்கு முன்பு வரை ஏர்டெல் நிறுவனம் ஒருவரிடமிருந்து சராசரியாக 200 ரூபாய் வருவாய் பெற்றுக்கொண்டிருந்த நிலையில், நடப்பாண்டில் அதனை 300 ரூபாய் ஆக உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…