ஒரு வழியாக வந்துட்டாங்க பா…. மீண்டும் செயலுக்கு வரும் ஜெட் ஏர்வேஸ்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் இந்தியாவில் முன்னணி விமான நிறுவனமாக இருந்து வந்தது.இதனை சுமார்  25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவன தலைவர்  நரேஷ் கோயல் தலைமை தாங்கி நடத்தி வந்தார். அதற்கு பின்பு அந்த நிறுவனம் தொடர்ந்து பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்தித்து வந்ததால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி முற்றிலும் மூடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு விமான சேவையை தொடங்க உள்ளது.இது குறித்து அந்நிறுவனம் டிவிட்டரில்  தெரிவித்தது,  “ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்  அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள்(737NG விமானங்களை இயக்க) மற்றும் கோ-பைலட்களை வேலைக்கு எடுக்கவுள்ளது. எனவே எங்க நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் உங்களது  ரெசியுமை அனுப்பி வைக்கவும்” என்று பதிவிட்டுள்ளது.கடந்த மாதம், நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கேப்டன் சுதிர் கவுர் திடீரென அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அவரது இந்த வெளியேறியதற்கான காரணம் குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…