என்னலாம் பன்ன போறாங்களோ! ரிசர்வ் வங்கியின் பணகொள்கை  கூட்டம் இன்று தொடங்குகிறது

 ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டம் இன்று துவங்குகிறது. நேற்று நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, இன்று நடைபெறுகிறது.பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று விடுமுறை அளித்தது மஹாராஷ்டிரா அரசு.

இதனையடுத்து, ரிசர்வ் வங்கியும் அதன் பணக்கொள்கை கூட்டம் 7ம் தேதி நடைபெற இருந்ததை, 8ம் தேதியாக மாற்றி அறிவித்தது.இக்கூட்டம் இன்று துவங்கி, 10ம் தேதி வரை நடைபெறும் என்றும்; 10ம் தேதி பணக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அரசு பத்திரங்கள், கரன்சி சந்தை போன்றவற்றுக்கும் ரிசர்வ் வங்கி நேற்று விடுமுறை அளித்ததால், அவை சம்பந்தமான நிலுவை பரிவர்த்தனைகளுக்கான செட்டில்மென்டுகள் இன்று மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவில், ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறித்து மாற்றம் செய்யப்படும்; செய்யப்படாது என, மாறுபட்ட கருத்துகளை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.எப்படியாகினும், 10ம் தேதி முடிவு தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…