மார்க்-க்கு வந்த சோதனை! டாப் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறிய மார்க் ஸுக்கர்பேர்க்

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’வின் பங்குகள் விலை சரிந்ததை அடுத்து, உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து, மார்க் ஸக்கர்பர்க் வெளியேறி இருப்பதாக ‘புளூம்பெர்க்’ தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி, அதானி ஆகியோர் மார்க் ஸக்கர்பர்க்கை விட பெரிய பணக்காரர்களாகி விட்டனர்.கடந்த டிசம்பர் காலாண்டில், மெட்டா நிறுவனத்தின் லாபம் குறைந்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் விலை 24 சதவீதம் சரிவை கண்டன.இதன் தொடர்ச்சியாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர் அதாவது, 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவைக் கண்டது.

மெட்டா நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஸக்கர்பர்க் இந்நிறுவனத்தின் 17 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதனால் அவரது சொத்து மதிப்பில், 1.9 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார்.இதையடுத்து, புளூம்பெர்க் பில்லியனர்ஸ் பட்டியலில் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, இப்போது முதல் தடவையாக, டாப் 10 பட்டியலில் அவர் இடம் பெறவில்லை.மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை சரிந்ததை அடுத்து, அதன் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் இது குறித்து மார்க், ”மக்கள் எங்கள் தயாரிப்புகளுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கின்றனர். வணிகங்கள் வளர்வதற்கு எங்கள் சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்,” என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…