போச்சு இதுவும் விலை ஏற போகுதா ! வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்ட விமான எரிபொருளின் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஜெட் விமானங்களின்  எரிபொருள் விலை 8.5 சதவீதமாக அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. ஜெட் எரிபொருள் மற்றும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) விலை ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 88வது நாளாக மாற்றமின்றி உள்ளது.

ATF விலை கிலோ லிட்டருக்கு ரூ.6,743.25 (8.5 சதவீதம்) உயர்த்தப்பட்டு, தலைநகர் டெல்லியில் ரூ.86,038.16 விற்பனையாகி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம்  சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $147 ஐத் தொட்டபோது, ​​ATF விலை கிலோ லிட்டருக்கு ரூ.71,028.26-க்கு விற்பனையானது. மேலும் கடந்த 30 நாட்களில் 3 முறை விலையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஜெட் விமானங்கள் எரிபொருள் கிலோலிட்டருக்கு 2.75 சதவீதம்(ரூ.2,039.63)அதிகரித்து ரூ.76,062.04 விற்பனையானது. பின் ஜனவரி 16 ஆம் தேதி ஒரு கிலோ லிட்டருக்கு  4.25 சதவீதம் (ரூ.3,232.87) அதிகரித்து ரூ.79,294.91 ரூபாய்க்கு விற்பனையானது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…