இவருக்கு இவ்ளோ நஷ்டமா!!  ஒரே நாளில் ரூ.17,000 கோடி இழப்பு

உலகின் முதல் பணக்காரரும், முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் பங்கு சந்தையில்  ஒரே நாளில்  12% வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆறு நிறுவனங்களுக்கு தலைவரான எலான் மஸ்கின்  ட்விட்டர்  தளத்தில் சுமார்  சுமார் 67 மில்லியன் நபர்கள்  பின்தொடர்கிறார்கள். அதனால் அவர் எந்த விஷயத்தை பற்றி ட்விட்டரில் பேசினாலும் அது அடுத்த அரை மணி நேரத்தில் வைரலாகும். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டோஜ் காயின் என்ற  கிரிப்டோ கரன்சிக்கு சாதமாக ட்வீட் செய்தார். அவர் ட்வீட் செய்த அந்த நாளே   டோஜ் காயினின்  மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது.இதனால் பங்கு சந்தையிலும், கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்பவர்கள் அவரது டீவீட்டை எப்போதும் எதிர்நோக்கியே காத்திருப்பார்கள். இப்படி இருக்கையில்  அவரது நிறுவனமே ஒரு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தினை பங்கு மதிப்பு ஒரே நாளில் 12% வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால், ஒரே நாளில் ரூ. 17,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு காரணம்  2022-ம் ஆண்டில், புதிய வாகனங்களை ஏதும் டெஸ்லா  அறிமுகபடுத்தாதல் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…