இந்த மாசம் என்னால மாற போகுதோ!! அதிகரிக்குமா சிலிண்டரின் விலை

இந்தியாவை பொறுத்த வரை ஒன்றிய அரசு  ஒவ்வொரு மாதமும் புதுப்புது   அறிவிப்புகளை வெளியிடும். சமையல் எரிவாயுவின்  விலை உயர்த்துவது முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு வரை எல்லாம் மாத தொடக்கத்தில் தான் அதிகரிக்கும்.

அதன்படி இந்த மாதத்திற்கான  சிலிண்டர்களின் விலை  தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு சிலிண்டரின் விலை 915 ரூபாயாக உள்ளது. பிப்ரவரி 1ம் தேதியான இன்று மத்திய  பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தில் ஏராளமான விதிமுறைகள் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி எஸ்பிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக விதிமுறையை மாற்றி இருக்கிறது. அதன்படி ஐ எம் பி எஸ் பரிவர்த்தனை காண வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. மேலும் ஐ அம் பிஎஸ் பரிவர்த்தனை உங்களுக்கான சேவை கட்டணத்தையும் எஸ்பிஐ வங்கியானது ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி எஸ்பிஐ யோனோ அப் மூலமாக ஐ எம் பி எஸ் முறையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை சேவை கட்டணமின்றி பணம் அனுப்பலாம். இது இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.

மேலும் பேங்க் ஆப் பரோடா பின் காசோலை அனுமதி விதியும் மாறியிருக்கிறது. பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் நாளை முதல் காசோலை செலுத்துவதற்கான பாசிட்டிவ் புதிய முறையை பின்பற்ற வேண்டும். அதாவது இப்போது காசோலை கொடுத்த தகவல்கள் அனுப்ப வேண்டும், அப்போதுதான் உங்கள் காசோலை கிளியர் ஆகும். இந்த மாற்றங்கள் ரூபாய் 10 லட்சத்திற்கும் மேலான காசுகளில் கிளியரன்ஸ் ஆனது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி ஏமாற்றப்பட்ட திதிகளின் தாக்கம் அதன் வாடிக்கையாளர்கள் மேல் நேரடியாக இருக்கும். அதாவது உங்கள் கணக்கில் பணம் இல்லாமல் தவணை அல்லது முதலீடு தோல்வியடைந்தால், 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதுவரையிலும் இந்த அபராதம் 100 ரூபாயாக இருந்தது. நாளை நடக்க உள்ள பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதில் பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பதே மக்கள் பெரிதும் எதிர்பார்த்த படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…