ஏர்டெலில் 1.28% பங்குகளை வாங்கிய கூகுள் நிறுவனம்

அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் , டெல்லியைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் உடன் இணைந்து $1 பில்லியன் வரை முதலீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது . அதன்படி பார்தி ஏர்டெல்லில்  $700 மில்லியன் டாலர்க்கு  1.28% பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது கூகுள் நிறுவனம். இதனை தொடர்ந்து  பல ஆண்டு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு $300 மில்லியன் வரை முதலீடு செய்வதும் திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து குறித்து ஏர்டெல் அளித்த அறிக்கையில்  இந்த வணிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஏர்டெல் மற்றும் கூகுள் இணைந்து ஏர்டெல்லில்  நிறைய புதிய சலுகைகளை உருவாகவுள்ளது. மேலும் இந்த  முதலீட்டினால்  மூலம் நுகர்வோருக்கு எளிதில்  ஆண்ட்ராய்டு  சாதனங்களை கொண்டு சேர்க்க முடியும். இதனை செய்ய பல்வேறு சாதன உற்பத்தியாளர்களுடன் பேசி வருகிறது கூகுள். கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ குறைந்த விலையில் 4ஜி சாதனத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்லின் சமீபத்திய முதலீட்டைத் தவிர, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவிலும் கூகுள் $4.5 பில்லியன் தொகையை முதலீடு செய்துள்ளது. மேலும், கூகுள் அதன் ஆக்சிலரேட்டர் திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஒரு டஜன் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…