குறைந்த பட்ச ஊதியம் , குடியேற்றம் குறித்து ஆய்வறிக்கை : பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற 3 அமெரிக்கர்கள்

மருத்துவம் , இயற்பியல் , வேதியியல் , இலக்கியம் , அமைதி ஆகிய துறைகளுக்கு இந்தாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதியாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது .இவ்விருது அமெரிக்காவினை சேர்ந்த 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொருளாதாரத்திற்கான நோபல் விருது ஆல்ஃபிரட் நோபலின் விருப்பப்படி நிறுவப்படவில்லை .ஆனால் ஸ்வீடிஷ் மத்திய வங்கியால் அவரது நினைவாக 1968 இல், முதல் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் கடைசி பரிசு.குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் முறையில் பணியமர்வு மற்றும் கல்வி ஆகியவற்றின் மூலம் தொழிலாளர் சந்தை பாதிப்புகள் குறித்த முன்னோடி ஆராய்ச்சிக்காகவும் ,பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கட்டமைப்பினை உருவாக்கியதற்காகவும் இந்தாண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 3 நபர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கனடாவில் பிறந்த டேவிட் கார்டுக்கு பரிசின் ஒரு பகுதியும் , மற்ற பாதியை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து ஜோசுவா ஆங்கிரிஸ்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கைடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது .
குறைந்தப்பட்ச ஊதியம் – தொழிலாளர்கள் குடியேற்றம் குறித்து ஆய்வறிக்கை :
டேவிட் கார்ட் , தனது ஆராய்ச்சினை நியூ ஜெர்சி மற்றும் கிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள உணவகங்களில் தொடங்கினார் . தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளை பட்டியலிட்டனர் . அவரும் அவரது மறைந்த ஆராய்ச்சி கூட்டாளியான ஆலன் க்ரூஜரும் மணிநேர (hour based work ) குறைந்தபட்ச ஊதியத்தின் அதிகரிப்பு வேலைவாய்ப்பை பாதிக்காது என்பதைக் கண்டறிந்தனர், குறைந்தபட்ச ஊதிய உயர்வு குறைந்த பணியமர்த்தலுக்கு வழிவகுக்கும் என்று வழக்கமான கேள்விக்கு இவரது ஆய்வறிக்கை தீர்வினை அளித்துள்ளது .அதைப்போல் , தொழிலாளர்கள் பணிக்காக மற்ற இடங்களில் குடியேற்றம் அடையும் சூழலில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டும் ஊதியத்தொகை குறித்த பல கேள்விகளுக்கும் புதிய தீர்வுக்கான கட்டமைப்பை இவர்களது அறிக்கை வெளிக்கொணர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது .