இது மாற்றத்திற்கான பட்ஜெட் அல்ல, ஏமாற்றத்திற்கான பட்ஜெட்… கமல்ஹாசன் ட்விட்!

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
ஸ்டாலின் தலைமையிலான முதல் பட்ஜெட் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி பல்வேறு திட்டங்கள் குறித்த சமூகநீதி அடிப்படையிலான அறிவிப்புகள் இருந்தன.
இருப்பினும், பட்ஜெட் ஆனது கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பட்ஜெட் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அதில், தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றிற்கும்,பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் திட்டங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார். மேலும், மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என தெரிவித்துள்ளார்.