மாஸ்டருக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி!

ஏடிஎம்களில் பணம் எடுக்கப் பயன்படுத்தும் கார்டுகளை மாஸ்டர் நிறுவனமும் தயாரித்து வழங்கி வருகிறது. ஆனால், ரிசர்வ் வங்கி 2018 ஆம் ஆண்டு தெரிவித்த விதிகளின் படி, இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகள் அடங்கிய சர்வர் இந்தியாவில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டும் மாஸ்டர் நிறுவனம் அந்த விதிகளைப் பின்பற்றாததால், வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் புதிய கார்டுகளை வழங்க மாஸ்டர் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
மேலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டின்னர்ஸ் கிளப் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் புதிய கார்டுகளை மே 1 ஆம் தேதி முதல் விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.