எல்ஐசி யில் இருந்து வெளியேறும் மத்திய அரசு!

எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்கினை விற்க திட்டமிட்டிருப்பதாகவும், அதனை பொது பங்கில் விற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நல்ல லாபம் தரும் எல்ஐசியின் செய்யும் பங்கினை ஏன் மத்திய அரசு விற்க முடிவு செய்துள்ளது இன்று எதிர்ப்புகள் பல கிளம்பின.
அரசாங்கத்துக்கு நிதி தேவைப்படும் எல்ஐசியை போதெல்லாம் செய்கிறது. ஆனாலும் இது விற்பதற்கு காரணம் என்ன என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு எல்ஐசியில் அரசின் பங்கு பொது பங்காக விற்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அது இந்த ஆண்டு நடக்காது,ஆனால் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஜனவரி-மார்ச் 2022 காலாண்டில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பங்கு வெளியீட்டிற்கான மதிப்பீடு 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன.