சென்னை தவிர பிற மாவட்டங்களில் 100 ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலை

பொதுத்துறை நிறுவனங்கள் உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பத் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து விலை உச்சம் பெற்று வருகிறது.
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 99.82 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 93. 74 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல், , நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை 101 -102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.