நாளை சதமடிக்குமா பெட்ரோல் விலை?

பொதுத்துறை நிறுவனங்கள் உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பத் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து விலை உச்சம் பெற்று வருகிறது.
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 99.49 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும், டீசல் விலை லிட்டருக்கு 93. 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.