20 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 44 வது ஆண்டுவிழா இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பேசிய, முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர்களில் ஒருவரான நீதா அம்பானி பேசியதாவது, எங்கள் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 20 லட்சம் பேருக்கு இலவச தடுப்பூசி போடப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் ரிலையன்ஸ் நிறுவனம் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை யோ அல்லது போனஸ் தொகையையோ குறைக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *