விநாயகர் சதுர்த்தி முதல் மலிவு விலை ஸ்மார்ட்போன்கள்… அம்பானி அறிவிப்பு

இந்தியாவில், அனைவருக்கும் ஸ்மார்ட்போன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க இருப்பதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது உலகம் முழுவதும் உள்ள கொரோனா பொது முடக்கத்தால் ஸ்மார்ட் போன் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டமான இது குறித்த நேரத்தில் செயல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44 ஆவது வருடாந்திரக் கூட்டம் இன்று(24.6.2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, “கூகுள் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மலிவு விலையில் தரமான ஸ்மார்ட்போன்களைத் தயாரித்துள்ளது.
ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய இந்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஸ்மார்ட்போன், அல்ட்ரா-மலிவு மற்றும் பேக்ஸ் கட்டிங்-எட்ஜ் ஆகிய அம்சங்களை கொண்டது.
இரு நிறுவனங்களின் பயன்பாடுகளிலிருந்தும் முழு தொகுப்பு பயன்பாடுகளையும் ஆதரிக்கும் ஒரு முழுமையான ஸ்மார்ட்போன் இது. இந்த ஸ்மார்ட்போன்கள் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.