ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் அந்தஸ்தை இழந்த அதானி

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதானி குழுமம் 10 ஆயிரம் கோடி டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட ஆசியாவின் 3-வது குழும நிறுவனமாக இருந்தது.

இந்நிலையில், என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம், அதானி நிறுவனங்களில் அதிக முதலீடுகளை கொண்ட மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கியதாக செய்தி வெளியானது.

இதனையடுத்து, இவ்வார தொடக்கத்தில் 7,700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் நிகர சொத்து மதிப்பு, கடந்த சில நாட்களில் 6,300 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவர் 900 கோடி டாலர்களை இழந்துள்ளார். 

இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தின் போது, மேலும் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. முக்கியமாக, பெருந்தொற்று காலத்திலும் அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்ததும், இப்பிரச்னைக்கு முன்னர் அவரது 6 நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தில் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், அவரது சொத்து மதிப்பு குறைந்து, ஆசியாவின் 2-வது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார். தற்போது பட்டியலில் அம்பானியை விட பின் தங்கியுள்ளார்.அதானியின் 2-ம் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *