மாலையில் மீண்டும் சரிந்த தங்கம் விலை…பொது மக்கள் மகிழ்ச்சி
உலகம் முழுவதும் கொரோனா பொது முடக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் பல தொழில்கள் முடக்கமடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
பிறகு, படிப்படியாக தங்கம் விலை குறைந்து 34000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வருகிறது.
இன்று காலை சவரனுக்கு ரூ.496 குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் 616ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய மாலை நிலவரத்தின் படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 66ரூபாய் குறைந்து 4,500ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.616 குறைந்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி 74.40ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 74,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.