கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை

உலகம் முழுவதும் கொரோனா பொது முடக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் பல தொழில்கள் முடக்கமடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
பிறகு, படிப்படியாக தங்கம் விலை குறைந்து 34000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள பொது முடக்கம் நீட்டித்துக் கொண்டிருப்பதால் தங்கம் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
நேற்று(4.6.2021) குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,300க்கும் விற்பனையாகிறது.