சதத்தை நெருங்கும் பெட்ரோல் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதியளித்தது.
அதிலிருந்து பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதில்லை.
இந்நிலையில், இன்னும் சில நாட்களில் பெட்ரோல் விலை சதத்தை நெருங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று(3.6.2021) சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.99-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று பெட்ரோல் லிட்டருக்கு 0.24 காசுகள் உயர்ந்து 96.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 0.26 காசுகள் உயர்ந்து 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.