சற்றே குறைந்த தங்கம் விலை!

உலகம் முழுவதும் கொரோனா பொது முடக்கம் காரணமாக பல தொழில்கள் முடங்கியுள்ளதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.
நேற்று தங்கத்தின் விலை அதிகரித்திருந்த நிலையில், இன்று விலை சற்றே குறைந்துள்ளது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, .4,635 ரூபாய்க்கும் சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 37,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து 76,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.76.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.