மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை!

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்திருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நாற்பதாயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், விலை சற்று குறைந்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 384 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,650 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 384 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 5,009 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 40,072 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய வெள்ளி விலையில் இருந்து மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 76.00 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 76,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.