மீண்டும் எகிறும் தங்கம் விலை

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல தொழில்கள் முடங்கியுள்ளதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.
கொரோனா பொது முடக்கக் காலத்தில் விலையில் எற்றமும் இறக்கமும் இருந்து வந்தது, இந்நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. சென்னையில், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 28 உயர்ந்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,598-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 224 உயர்ந்து ரூ.36,784-க்கு விற்பனையாகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி 76.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.