2025-ஆம் ஆண்டிற்குள் 7 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அமேசான் நிறுவனம்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் 2025-ஆம் ஆண்டிற்குள் 7 லட்சம் வேலைவாய்ப்புகளை கடந்து விடுவோம் என தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 3 லட்சம் வேலைவாய்ப்புகளை அமேசான் நிறுவனம் உருவாக்கியுள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 2025-ஆம் ஆண்டிற்குள் அமேசான் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கூறியிருந்தார்.

கொரோனா ஊரடங்கின் போது மக்கள் ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.இதன் மூலமாகவே இந்த 3 லட்சம் வேலைவாய்ப்புகள் சாத்தியமானது.அதேபோல் இந்த புதிய இலக்கையும் எட்டுவோம் என அமேசான் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *