தமிழகத்தில் ரூ.7579 கோடியாக அதிகரித்த ஜிஎஸ்டி வரி வசூல்
கொரோனா பரவலுக்கு பிறகு சில மாதங்களாகவே ஜிஎஸ்டி வரி வசூல் அனைத்து மாநிலங்களிலும் குறைந்த அளவே வசூலானது.தமிழகத்திலும் இதே நிலையே தொடர்ந்தது.இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும் அதிகமாக வசூலாகியுள்ளது.
கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதத்தில் ரூ.6177 கோடி வரி வசூலான நிலையில் இந்த ஆண்டு மார்ச்-ல் ரூ.7579 கோடியாக அதிகரித்துள்ளது.இது கடந்த ஆண்டு வசூலான தொகையைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.