வங்கிக் கடன் தவணையை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி

மக்களின் அடிப்படை பொருளாதாரம் கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. மக்கள் அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், வீட்டுக் கடன் செலுத்துவதற்காக சில தளர்வுகள் அறிவிக்கக்ப்பட்டிருந்தது.

இந்நிலையில், 6 மாத கடன் தவணை செலுத்துவதில் வழங்கப்பட்ட சலுகையில், பல வங்கிகள், தவணைத் தொகை கட்டாததினால், அசல் தொகைக்கான வட்டிக்கு வட்டி விதித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தன. இது தொடர்பாக போடப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இதில், வட்டிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து தளர்வு வழங்கினால் மத்திய அரசுக்கு 6 லட்சம் கோடி வரை இழப்பீடு ஏற்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடுமுழுவதிலும் உள்ள வங்கிகளுக்கு அதிக இழப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா கால தவணை சலுகையை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது; ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் கொள்கையில் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *