மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தனியார் துறை உதவியாக இருக்கும் – நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு,பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தது.இது குறித்து தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் அதன் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்றும் புதிய தொழில்நுட்பங்கள் பொதுத்துறை நிறுவனங்களிலும் புகுத்தப்படும் எனவும் அவர் பேசினார்.தனியாரின் பங்களிப்பும்,புதிய தொழில்நுட்பமும் பொதுத்துறை நிறுவனத்தின் திறனையும் அதன் மூலம் அரசிற்கு கிடைக்கும் வருமானத்தையும் அதிகப்படுத்தும்.இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கும் என பேசினார்.