அரசும், ரிசர்வ் வங்கியும் கிரிப்டோ கரன்சியில் ஒரே நிலைப்பாடு

உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.இதற்கு காரணம் அதன் மதிப்பு எவ்வாறு அதிகரிக்கிறது? எவ்வாறு குறைகிறது? என்பது இந்தியா உட்பட பல நாடுகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.மத்திய அரசு கிரிப்டோ கரன்சி தொடர்பான மசோதாவை தயாரித்து வருகிறது.மேலும்,ரிசர்வ் வங்கியும் தற்காலிகமாக கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் தடை செய்துள்ளது.மத்திய அரசும்,ரிசர்வ் வங்கியும் இந்த கிரிப்டோ கரன்சியில் அவசரம் காட்டமால் நிதானமாக செயல்பட்டு வருவது பாராட்டுதலுக்குரியது.இந்த கிரிப்டோ கரன்சி குறித்து முழுவதுமாக தெரிந்துகொள்ளாமல் அதனை இந்தியாவில் அனுமதிப்பதை தீவிரவாத அமைப்பினரும் மற்றும் கருப்புப்பணம் வைத்திருப்போரும் தவறாக பயன்படுத்த வழிகோலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *