நாடு முழுவதும் நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதை அடுத்து, இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், இன்று விடுமுறை, நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என 2 வார இறுதி நாட்களுடன், 2 நாட்கள் வேலைநிறுத்தமும் சேர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது. இதனால் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிச் சேவைகள் முடங்கின.

இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கிகள் அறிவித்திருந்தன.

அதன்படி, மார்ச்15, 16 என இரு நாட்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் (Bank Unions) அறிவித்துள்ளன. இதையடுத்து பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் 4 நாட்களுக்கு இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *