கடந்தாண்டை விட கார் விற்பனை அதிகரிப்பு!

கார் விற்பனை பிப்ரவரி மாதத்தில், 17.92 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் தலைமை இயக்குநர் ராஜேஷ் மேனன், “கடந்த 2020 பிப்ரவரியில் கார் விற்பனை 2,36,622 என இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் 2,81,380 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கார் விற்பனை சதவீதம் 17.92 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இரு சக்கர் வாகன உற்பத்தியும் 12,97,787 ல் இருந்து 10.3% உயர்ந்து 14,26,865ஐ எட்டியுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் ஸ்கூட்டர் விற்பனையும் 4,22,16 ல் இருந்து 10.9% உயர்ந்து 4,64,747 ஆகியுள்ளது.

ஆனால், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 41,2300லிருந்து 33.82% சரிவடைந்து 27,331யாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…