தொடரும் தங்கம் விலை வீழ்ச்சி!

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.கொரோனாவால் நிலவிய தொழில்துறை தேக்கம், முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பியது. அச்சமயம் தங்கத்தின் மீதான முதலீடுகள் ஏக போகமாக அதிகரித்ததால் தேவை அதிகரித்து, விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது.

பின்னர், தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்ததால் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தங்கம் விலை தொடர் சரிவை சந்திக்கிறது. ஒரு சில நாட்களில் விலை ஏற்றமடைந்தாலும் பெரிதளவில் மாற்றம் இருக்கவில்லை.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,183க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.33,464க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,200க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…