இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை!
கொரோனா முடக்க காலத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது. இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது ஒரு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வந்த வேலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
காலையில் சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,904க்கு விற்பனையான நிலையில், தங்கத்தின் விலை ஏறிவிடுமோ என்ற எண்ணத்தில் மக்கள் நகை கடைக்கு படையெடுத்தனர். ஆனால், இன்று மாலை மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,736-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, ரூ.4,217-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை, இன்று காலை 71,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து ரூ.70,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.