சென்னையில் ‘லா மேட்ச் சிட்ரோய்ன்’
சிட்ரோய்ன் என்ற கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் சென்னையில், ’லா மேட்ச் சிட்ரோய்ன்’ என்ற பெயரில் புதிய விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து சிட்ரோய்ன் இந்திய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் தலைவர் ஜோயல் வெரானி, “இந்திய நுகர்வோரின் அனுபவத்தில் புதிய புரட்சியை உருவாக்கும் விதத்தில், எங்கள் நிறுவனம் டிஜிட்டல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய விற்பனையகத்தைத் திறந்துள்ளோம். சி5 ஏர்கிராஸ் சொகுசு கார் அறிமுகமாகவுள்ள இந்த நேரத்தில் இந்தியாவின் 10- முக்கிய நகரங்களில் ’லா மேசன் சிட்ரோய்ன்’ விற்பனையகங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்கும்.
மேலும், சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை உரிய கால இடைவெளிகளில் வழங்குவதுடன், உண்மையான உதிரிபாகங்கள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்க உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.