மளிகைபொருள் சேவை புதிதாக 50 நகரங்களுக்கு அறிமுகம் – ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட் நிறுவனமானது தனது மளிகை பொருள் வழங்கும் சேவையை புதிதாக 50 நகரங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை எளிதாகவும்,விரைவாகவும் பெறலாம் என ஃப்ளிகார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் கொல்கத்தா,புனே மற்றும் அகமதாபாத் போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.மேலும் மைசூர்,கான்பூர்,வாரங்கல்,அலகாபாத்,அலிப்பூர்,ஜெய்ப்பூர்,சண்டிகர்,ராஜ்கோட்,வதோதரா,வேலூர்,திருப்பதி போன்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.மேலும் மக்கள் கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் எனவும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் ஃப்ளிப்கார்ட் கூறியுள்ளது.